Editorial / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 149 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம், நேற்று நள்ளிரவு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் தரைமட்டமாகின.
இந்த அனர்த்தத்தினால், மொர்லோஸ் மாகாணத்தில் 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 இலட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த பேரழிவு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2 ஆவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
27 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
53 minute ago
1 hours ago