2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மு.கா உயர்பீடம் அவசரமாக கூடவுள்ளது

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம்எஸ்.மௌலானா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் அவசரமாக கூடவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து, எதிராகவே வாக்களித்த நிலையில்,

“அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்த ஒரு சில தினங்களில் கட்சியின் உச்ச பீடம் அவசரமாக கூட்டப்படவிருக்கிறது” என காங்கிரஸின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

"20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதிராக வாக்களித்த நிலையில், அக்கட்சியின் 04 எம்.பி.க்கள் ஆதரித்த விவகாரம் தொடர்பிலான ஊடக வெளியீடு" எனும் தலைப்பில் அவர் சனிக்கிழமை (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளத.

வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவு  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் முன்னிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களின் அவசரக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைசல் காஸிம், எம்.எஸ்.தொளபீக், நஸீர் அஹமட் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இவர்கள் நால்வரும் தாம் ஆதரவாக வாக்களித்தமைக்கான விளக்கத்தை வழங்கியிருந்தனர். இவ்விளக்கத்தை கட்சியின் உச்ச பீடத்திற்கு வழங்குமாறு தலைவர் மற்றும் செயலாளரினால் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் உச்ச பீடக்கூட்டத்தை அவசரமாக கூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .