Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் இருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கான கால அவகாசம் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
நாம் எவ்விதத்திலும் பாதுகாப்பு பிரிவைப் பயன்படுத்தி ரணிலை அலரிமாளிகையில் இருந்து வெளியேற்றமாட்டோம். அவர் தற்போது முன்னாள் பிரதமர் என்பதால், அவர் அங்கிருந்து வெளியேற கால அவகாசம் வழங்கப்படும் என்று நாமல் தெரிவித்துள்ளார்.
1 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Mar 2026