2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ரிஷாட் கைது விவகாரம்; ’சி.ஐ.டியினர் வெட்கப்பட வேண்டும்’

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்)       

தேயிலை  உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை கைது செய்ய முடியாமலிருக்கும் சி.ஐ.டியினர் அதற்காக வெட்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 

தலவாக்கலையில் உள்ளதேயிலை ஆராய்ச்சி நிலையகத்துக்கு வருகைத் தந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், " உலகிலுள்ள மிகவும் பழமையான தேயிலை ஆராய்ச்சி நிலையங்களில் எமது நாட்டிலுள்ள இந்த ஆய்வு நிலையம் 2ஆவது இடத்தை வகிக்கின்றது. அதற்கு 95 வருடகால வரலாறும் இருக்கின்றது. இலங்கையில் தேயிலை உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. தேயிலை துறையின் இதயம் என்றுகூட சொல்லாம். 

இலங்கையில் தரமான தேயிலை உற்பத்திக்கும், 'சிலோன் டீ' என்ற நாமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும் போதுமானளவு ஆலோசனைகளையும், ஆய்வு உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.  

இலங்கையில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளோம். 300 மில்லியன் கிலோ ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் அதனை 350 மில்லியன் கிலோவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். இன்னும் ஐந்தாண்டுகளில் அதற்கான இலக்கு அடையப்படும்." எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் இம்மாதம் 22 ஆம் திகதி கண்டிப்பாக நிறைவேற்றப்படுமெனவும், ரிஷாட் பதியூதீனை கைது செய்யமுடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்படவேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X