Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ராஜிதவின் செயலாளர் என்று கூறப்படும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் எதிர்வரும் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (31) காலை சரணடைந்ததை அடுத்து, ரூமி மொஹமட் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவர் வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (30) தடை விதித்திருந்தது.
வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு அமைய, அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago