2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

ரூ.22 மில். அன்பளிப்பு சீன பௌத்த சங்கத்தால் கையளிப்பு

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சீன பௌத்த சங்கம்  22 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (03) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக் கையளித்தது.

Sri Guanguan தேரர் உள்ளிட்ட சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள், இந்த நிதி அன்பளிப்பை, ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வண. கல்லேல்லே சுமனசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் மேலும் விருத்தி அடைகின்றதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை அனர்த்தங்களைச் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன அரசாங்கம் உதவிகளை வழங்குவதையிட்டு, தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேபோல் சர்வதேச ரீதியில் கிடைக்கும் நிதி உதவிகளும் சீன அரசாங்கத்தின் நிதி உதவிகளும் சீரற்ற வானிலையால் அனர்த்தத்துக்குகுள்ளாகி வீடுகளை இழந்த மக்களுக்கு, வீடுகளை நிர்மாணிப்பதற்காக உபயோகப்படுத்தப்படுமெனக் கூறிய ஜனாதிபதி, சீன பெளத்த சங்கத்தின் தேரர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட வசதிகளை ஏற்படுத்துவதாகவும் உறுதி கூறினார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .