Editorial / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தன்னுடைய நாடாளுமன்ற முதலாவது உரையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அவ்வாறான கருத்துக்கள் சில தமிழ் ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் பெரிதாக சிலாகிக்கப்பட்டாலும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கோ அலலது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ எந்தவிதமான தீர்வைப் பெற்றுத் தராது எனவும் பாதகங்களையே அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பலமான மத்திய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், குறித்த அரசாங்கத்துடன் தனக்கு இருக்கும் தேசிய நல்லிணக்கத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago