2026 மார்ச் 05, வியாழக்கிழமை

வடமாகாணத்துக்கு புதிய அமைச்சர்கள்

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் இரு அமைச்சர்கள் இன்று (23) புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். வடமாகாண விவசாய அமைச்சராக க.சிவநேசனும், சுகாதார  அமைச்சராக குணசீலனும் பதவியேற்றுள்ளனர்.

இவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் தமது அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

இதேவேளை, வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனிடமிருந்த பதவிகளில் போக்குவரத்து துறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .