2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வௌியேறும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை

J.A. George   / 2021 ஜனவரி 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை இன்று (28) முன்னெடுக்கப்படுகின்றது.

வௌி மாவட்டங்களுக்கு வௌியேறக்கூடிய 12 இடங்களிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனை தவிர மாகாணத்துக்கு உள்ளும் இன்று விசேட சோதனைகள் மற்றும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பிலிருந்து வௌியேறும் பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .