2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் ஊரடங்கு: செய்தியில் உண்மையில்லை

Niroshini   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை, பம்பலபிட்டிய ஆகிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான  குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், இந்தப் பொய் செய்தி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவெனத் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம், மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டாம். அத்துடன், இது போன்று போலி செய்திகளைப் பரப்பிய இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--