2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வித்தியா வழக்கில் விஜயகலாவுக்கு விமர்சனம்

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நடவடிக்கைகளை, யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விமர்சித்துள்ளார்.

தனது தீர்ப்பின் சுருக்கத்தை வாசித்த நீதிபதி இளஞ்செழியன், 9ஆவது சந்தேகநபரான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரைத் தப்பிக்க வைப்பதற்கு முயன்றமை போன்று செயற்பட்டார் எனக் குறிப்பிட்டார்.

மகாலிங்கம் சசிகுமார், பொதுமக்களால் கட்டி வைக்கப்பட்டு அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அங்கு சென்று, அவ்விடயத்தில் அவர் தலையிட்டார் என, சாட்சியமளிப்பில் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X