எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகம் உட்பட இரண்டு வீடுகள் மீது, மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில், அலுவலகம் மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பிணக்கு ஒன்று தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில், சனிக்கிழமை நள்ளிரவு கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுக்கொண்டிருந்தது.
இதன்போது, சம்மேளன அலுவலக கட்டடத்துக்கு, வெளியே ஒன்று திரண்ட இளைஞர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலத்தின் மீது கற்களை வீசியுள்ளனர்.
சம்பவம்பற்றி அறிந்த காத்தான்குடி பொலிஸார், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிணக்கோடு தொடர்புடையவர்களை, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக, தெரிவித்தனர்.
இதேவேளை, காத்தான்குடி கபுறடி வீதியிலுள்ள வீடொன்றின் மீதும் மற்றும் காத்தான்குடி பழைய தபாலக வீதியிலுள்ள வீடொன்றின் மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளதுடன் அவ்வீடுகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், காத்தான்குடியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கதவும் அன்றிரவே உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், சம்பவங்களுடன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
39 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago