2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வெள்ளத்தினால் கட்டுநாயக்காவிலிருந்து விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம்

Super User   / 2010 மே 18 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ள அனைத்து சர்வதேச விமானங்களும் ஏற்கனவே திட்டமிட்ட நேரத்தில் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக விமான நிலையத்தை வந்தடயவுள்ள பயணிகள் கால தாமதமாகவே வந்தடைகின்றனர். இதனாலேயே விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முகாமையாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் 6 பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பயணிகள் நேர காலத்தோடு விமானநிலையத்தை வந்தடைவதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பயணிகள் நான்கு மணித்தியாலத்துக்கு முன்னரேனும் விமான நிலையத்தை வந்தடையுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--