2020 ஜூன் 03, புதன்கிழமை

15ஆயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு 15ஆயிரம் ரூபாய் முற்பணக் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கம்பனிகள் 10 ஆயிரம் ரூபாய் முற்பணத்தை வழங்க தீர்மானித்துள்ள நிலையில், இலங்கை தேயிலை சபையின் ஊடாக 5 ரூபாய் முற்பணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கூடிய அமைச்சரவை இன்று (15) அங்கீகாரமளித்துள்ளது.

அமைச்சர் திகாம்பரத்தால் இந்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டதுடன், மொத்தமாக 15 ஆயிரம் ரூபாய் தீபாவளி முற்பணமாக எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் தொழிலாளருக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X