2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

யாழ். வீதி விபத்தில் படைச் சிப்பாய் பலி

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். முகமாலை, ஏ - 9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ரோந்து நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்த படைவீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இரத்தினபுரியைச் சேர்ந்த யுகசிங்க ஆராட்சிகே தரிச லக்சிக என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவரது மரணம் தொடர்பாகக் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்ட சாவகச்சேரி நீதிவான் சடலத்தை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி மூலம் பிரேத பரிசோதனை நடத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X