2021 மார்ச் 03, புதன்கிழமை

பாக். தீவிரவாதிகள் இலங்கையில் பயிற்சி பெறவில்லை : கோட்டாபய

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத குழுவும்  இலங்கையில் பயிற்சி பெறவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

லக்ஷர் ஈ தொய்பா எனும் பயங்கரவாத  அமைப்பின் அங்கத்தவர் ஒருவர்இ தான் கொழும்பில் பயிற்சி  பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும் முகமாகவே பாதுகாப்பு செயலாளர் டெய்லி மிரர் இணையத்தளத்திடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் எந்தவொரு தீவிரவாதக் குழுவும் செயற்படவில்லை எனவும்  பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

இதேவேளை, லக்ஷர் ஈ தொய்பா எனும்  அமைப்பின் அங்கத்தவரது தகவல் குறித்து  வெளிவிவகார அமைச்சு  இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்தது.

இது தொடர்பாக புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் ஏற்கெனவே இது குறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளதாகவும் இது தொடர்பான விபரமான அறிக்கையொன்றை இலங்கை வெளிவிகார அமைசசு கோரியுள்ளதாகவும்  வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .