2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கட்டாரிலிருந்து எரிகாயங்களுடன் பணிப்பெண் நாடு திரும்பினார்

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                                  (எஸ். எம். மும்தாஜ்)

கட்டார் நாட்டில் சித்திரவதைக்குள்ளான பெண் ஒருவர் தீக்காயங்களுடன் முந்தல் வைத்தியசாலை இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன சந்திரசேகர தெரிவித்தார்.

கட்டார் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தீக்காயங்களுடன் நாடு திரும்பிய நிலையில் சிகிச்சைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தான் கட்டார் நாட்டின் வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றியதாகவும், அங்கு தன்னால் ஏற்பட்ட தவறொன்றின் காரணமாக அவ்வீட்டிலிருந்த பெண் தன் மீது சுடுநீரை வீசி தாக்கினார். இதனாலேயே தனக்கு இந்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் குறித்த பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தான் கடந்த 13ஆம் திகதி தாக்குதலுக்குள்ளானதாகவும், நேற்று புதன்கிழமை நாடு திரும்பியதாகவும் அப்பெண் பொலிசாரிடம் மேலும் கூறினார்.


  Comments - 0

  • Mohyuddin Rizvi Friday, 17 September 2010 08:20 PM

    இது ஒரு பாரதூரமான செயல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X