2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஸ்வர்ணமாலி எம்.பி. வைத்தியசாலையில்

Super User   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்  தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான உபேக்ஷா ஸ்வர்ணமாலி,  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டுப் பிரச்சினையொன்றினால் காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

'பபா' என அழைக்கப்படும் உபேக்ஷா ஸ்வர்ணமாலி, பிரபல தொலைக்காட்சி நடிகையாவார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு அவர்  வெற்றிபெற்றார். எனினும் பின்னர் அவர் அரசாங்கத் தரப்புக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்   தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படுகின்ற போதிலும், மேற்படி வீட்டு வன்முறை குறித்து இதுவரை உத்தியோகபூர்வ முறைப்பாடு எதுவும்  செய்யப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளன.
 


  Comments - 0

 • Thilak Wednesday, 16 February 2011 06:59 PM

  பணம், புகழ், அதிகார செல்வாக்கு அனைத்தும் உள்ள பெண்களுக்கும் வீட்டு வன்முறைகளிலிருந்து விடுதலை கிடையாதா?

  Reply : 0       0

  SLTJ.BLOGSPOT.COM Wednesday, 16 February 2011 07:41 PM

  பெண் என்ற பிறகு, அதுவும் நாடக நடிகையான பின் , இன்னும் எம் பி ஆனால் , வீடு எப்படி இருக்கும். ?? வீட்டில் பாராளுமன்ற விடயங்கள் நடைபெற்றதோ ?,
  அல்லது நாடக , கலை நிகழ்ச்சி நடை பெற்றதோ ? ??
  பிடிப்பு நடந்ததோ ? ......

  Reply : 0       0

  xlntgson Wednesday, 16 February 2011 09:14 PM

  வீட்டு வன்முறை? அடிபடும் கணவர்கள் வீட்டு வன்முறைக்கு ஆதரவானவர்களா? எதிரானவர்களா?
  கணவரின் அழுத்தத்தினாலேயே இவர் கட்சி மாறினார் என்றும் என்றும் கிசுகிசுப்பு உள்ளது, நானறியேன் பராபரமே!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X