2021 மார்ச் 03, புதன்கிழமை

இனவாதம் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது: சோமவன்ச

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாத மற்றும் மதவாத நிலைமையொன்று மீண்டும் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையை அரசாங்கம் தனது ஆசிர்வாதமாகவே கருதி வருகின்றது என்று தெரிவித்த அவர், பல்வேறு விதமாக கோபதாபங்களை தோற்றுவிக்காமல் நீண்டகால நோக்குடன் செயற்படுமாறு இலங்கை வாழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
யார் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது எனவும் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .