2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பல்கலைகழக அனுமதிக்கான வயதைக் குறைப்பது நல்லது: சந்திரசேகரன்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பள்ளிக் கல்விக்கான ஆண்டுகளை குறைப்பதில் சில பாதகங்கள் இருந்தாலும், பல்கலைக்கழ அனுமதிக்கான வயதைக்குறைப்பது வரவேற்கத்தக்கதே என்று கல்வியியலாளரான பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இலங்கையில் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதி வயதை குறைப்பதற்கான ஒரு திட்டத்தை தாம் ஆராய்வதாக இலங்கை உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா கூறியிருந்தார்.

அதற்காக பள்ளிக்கூடங்களுக்கான அனுமதி வயதை குறைப்பது மற்றும் தற்போது அமுலில் உள்ள 13 ஆண்டுகால பள்ளிக்கூடக் கல்வியை 12 ஆண்டுகளாக குறைப்பது ஆகியவை குறித்து தாம் ஆராய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே பேராசிரியர் சோ. சந்திரசேகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பல காரணங்களினால், பல்கலைக்கழக கல்வியை ஒருவர் முடிக்கும் காலம் அதிகமாக இருக்கின்றது.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வயதைக் குறைப்பதை வரவேற்கத்தக்கது. ஆனால்,  13 ஆண்டுகால பள்ளிக்கூடக் கல்வியை குறைப்பது சரியல்ல எனினும் ஆரம்பக் கல்வியை ஆரம்பிக்கும் வயதை குறைப்பது நல்லது என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .