2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘274 பேருக்கும் விடுதலை; என்னை நம்புங்கள்’

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததைப் போன்று, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 274 பேரையும் தான் ஜனாதிபதியானால், புனர்வாழ்வளித்து விடுதலைச் செய்வேன் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

தம்மிடமும் இந்த உறுதிமொழியை கோட்டாபய வழங்கிதாக,  நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு நேற்று (28) வருகைதந்திருந்த கோட்டாபய தலைமையிலான குழுவினர், நல்லை ஆதின குருக்களை முதலில் சந்தித்து கலந்துரையாடிலில் ஈடுபட்டனர். 

“சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக, கோட்டாபய தன்னிடம் உறுதியளித்துள்ளார். குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும். அதனூடாக அவர்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளார்” என ஆதின குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், றக்கா வீதியிலுள்ள இளங்கதிர் சனசமூக நிலையத்தில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,  'உங்கள் தலைவர்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்தி செயற்படுகின்றனர். ஆனால் நான் உங்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுவேன் எனத் தெரிவித்த அவர், என்னை நம்புங்கள் என்றார். 

“இராணுவ வசமிருந்த காணிகளின் 90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்தோம் .எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தவுடன் நான் பேசினேன்” என்றார். 

“கைதான முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு  புனர்வாழ்வளித்து விடுவித்தோம் . பிரச்சினைகளை வைத்து வாழாமல் எதிர்காலத்தை பற்றி யோசித்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .