Editorial / 2017 ஒக்டோபர் 26 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் 9 போர்க் கப்பல்கள் வருகைதரவுள்ளனவெனத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் நாட்டுக்குச் சொந்தமான Somudra Avijan என்ற போர்க் கப்பல், கொழும்புத் துறைமுகத்தை நேற்று (25) வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போர்க் கப்பல்கள், இலங்கைக்கு வருகைதரவுள்ளனவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தென்கொரிய போர்க் கப்பல்கள் இரண்டு, கொழும்புத்
துறைமுகத்தை இன்று (26) வந்தடையவுள்ளன.
அவற்றைத் தவிர, இந்திய போர்க் கப்பல், எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதியும், இந்தோனேஷியாவுக்குச் சொந்தமான போர்க் கப்பல் 4ஆம் திகதியும், பாகிஸ்தானுக்குச் சொந்தமான போர்க் கப்பல் 7ஆம் திகதியும், சீன போர்க் கப்பல் 10ஆம் திகதியும் வருகைதரவுள்ளதாக அறியமுடிகின்றது.
45 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
15 Jan 2026