2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கைகலப்பில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை-தல்பாவில பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (19) மாலை இடம்பெற்ற இச்சமபவத்தில், ரன்ன பகுதியைச் சேர்ந்த அஷான் உபேசிறி (வயது 23) என்ற இளைஞன்  உயிரிழந்துள்ளதுடன் தெவுந்தர -கபுகமே பிரதேசத்தைச் சேர்ந்த அனுர குமார ரனசிங்க வயது(39) என்பவர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் தெவுன்தர கபுகமே பகுதியிலுள்ள தனது உறவினரின் வீட்டுக்கு வந்தபோது இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.  

சிலவாரங்களுக்கு முன்பு மரண வீடொன்றில் ஏற்பட்ட முறுகலே இருவருக்குமிடையிலான கைகலப்புக்கு காரணமென கந்தர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X