2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பாடசாலை மாணவிகள் மூவர் கடத்தல்

Super User   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிஷான் ஜீவக ஜயருக்)

அக்குரஸ்ஸ, காந்தற, மாவரல்ல பொலிஸ் பிரிவுகளில் பாடசாலை மாணவிகள் மூவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளாதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சுமார் 15 வயதான இம்மாணவிகள் மாத்தறை மாவட்டத்தின் தீகல, கெகனதுற, தெய்யந்தர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் ஒரு சிறுமி இன்று அதிகாலை அவரின் வீட்டிலிருந்து கடத்தப்பட்டுள்ளார். மற்றொரு மாணவி உயன்வத்த விளையாட்டு மைதானத்திலிருந்து இன்று காலை கடத்தப்பட்டுள்ளார். இன்னொரு மாணவி பாசாலைக்குச் செல்லும் வழியில் முச்சக்கர வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

இம்மாணவிகள் கடத்தியதாக கூறப்படும் நபர்களுடன் காதல் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--