2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிலையம் திறப்பு

Super User   / 2012 நவம்பர் 19 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலி, வெலிவிட்டிய, திவிதுர பிரதேச செயலக பிரிவில் சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் சிறுவர் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிலையக் கட்டிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச். குணரத்ன வீரகோன் அண்மையில் திறந்துவைத்தார்.   தென் மாகாண சபை உறுப்பினர்கள், திவிதுர வெலிவிட்டிய பிரதம வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி காலத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த மகப்பேற்று சிகிச்சை நிலையக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .