2021 மார்ச் 01, திங்கட்கிழமை

எல்லையிடுவதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

குச்சவெளி- கோமரங்கடவெல நிர்வாக பிரதேச செயலகத்தை எல்லையிடுவதற்கு நடவடிக்கையெடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலக மண்டபத்தில், இன்று (29) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

1990களுக்குப் பின்னரான குடியேற்றத்தில், கோமரங்கடவல, குச்சவெளி போன்ற பகுதிகளிலுள்ள மக்களுடைய விவசாய நிலங்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரேரனைகளை முன்வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை, அவர் பணித்தார்.

இதில், எந்த இனத்துக்கும் பங்கம் ஏற்படாதவாறு, அவர்களுக்கான நில உரிமைக்கான நில விடுவிப்புகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், 1993ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிப் பிரகடனத்தின் படி, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .