2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

'ஒழுக்காற்று விசாரணை முடிந்ததும் சித்த மருத்துவபீடம் இயங்கும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எப்.முபாரக்,வடமலை ராஜ்குமார்  

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவபீட மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் முழுமையான ஒழுக்காற்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ரீ.ஜயசிங்கம் தெரிவித்தார்.

ஒழுக்காற்று விசாரணை முடிந்ததும் சித்த மருத்துவபீடம் இயங்கத் தொடங்குமெனவும் அவர் கூறினார்.  
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவபீட மாணவர்கள் ஒன்பது பேர் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளானமையைத் தொடர்ந்துஇ நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
இதனைத் தொடர்ந்துஇ அப்பீட மாணவர்கள் கடந்த  வெள்ளிக்கிழமை முதல் வகுப்புப்  புறக்கணிப்பில் ஈடுபட்டுவருவதாகவும் இது தொடர்பில் வளாக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம்  அறிவித்துள்ளதாகவும் அதன் பின்பே  வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு திங்கட்கிழமை (14) மாலை 6 மணிவரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில்இ மாணவர்கள் தமது வீடுகளுக்கு அதற்கு முன்பே திரும்பியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவத்துறையை சேர்ந்த தமிழ் மாணவர்களுக்கும் வர்த்தகத் துறையை சேர்ந்த பெரும்பான்மையின மாணவர்களுக்கும் இடையில் சில நாட்களாக முறுகல் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே மேற்படி தாக்குதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு  மாணவர்களும் கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும் அக்கரைப்பற்றைச் சேர்சந்த இரண்டு மாணவர்களும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் நீலாவணையைச் சேர்ந்த ஒரு  மாணவனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும் நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ஒரு  மாணவனுமே தாக்குதலுள்ளானார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .