அப்துல்சலாம் யாசீம் / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்ன புளியங்குளம், பெரிய புளியங்குளம் காணிகளை மீட்டுத்தாருமாறு, சிறு, மத்திய தர வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவிடம், ரொட்டவெவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசலுக்கு இராஜாங்க அமைச்சரது நிதியிலிருந்து கட்டடப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (12) நடைபெற்ற போதே, இக் கோரிக்கையை மக்கள் முன்வைத்தனர்.
புளியங்குளம் பகுதிக்கு விவசாயிகளை மேற்கொள்வதற்கு சென்றவர்களை, வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அச்சுறுத்தி வருவதாகவும் வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும் மக்கள் முறையிட்டனர்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, தற்போதைய ஆட்சியில் தமக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், அனைத்து இன மக்களுக்கும் சமமாக மதிக்கப்படுவர் என்றார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026