Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிடுவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இன்று (13) காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இவ் விஜயத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், நோயாளர்களை பார்வையிட்டதுடன், அவர்களோடு உரையாடி சுக நலன்களைக் கேட்டறிந்து கொண்டார்.
இது தொடர்பாக வைத்திய அதிகாரி பதில் கடமை புரியும் டொக்டர் ஏ.எம்.எம்.ஜிப்ரியுடன் கலந்துரையாடி, உடனடியாக தேவைப்படும் உதவிகளைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா தள வைத்தியசாலையில் தற்போது 56 பேர் டெங்குக் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர் என, டொக்டர் ஜிப்ரி தெரிவித்தார்.
அதேவேளை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago