2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

காணி ஆவணங்கள் வழங்குமாறு கோரிக்கை

பொன் ஆனந்தம்   / 2017 மே 24 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

மூதூர்; பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சம்பூர் கிராமத்தில் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள், மீளவும் வழங்கப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள போதும், அக்காணிகளுக்குரிய ஆவணங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே, அக்காணிகளுக்குரிய  ஆவணங்களை உரியவர்களுக்கு வழங்குமாறு  சம்பூர் கிராம அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேற்படி சங்கத்தின் தலைவர் க.சிங்கராசா, செயலாளர் சோ.சண்முகநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செவ்வாய்க்கிழமை (23) மாலை மகஜர் அனுப்பியுள்ளனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் உரியவர்களிடம்  மீண்டும் வழங்கப்பட்ட போதும், அவை இன்னும் அரசாங்க உடைமையாகவே இருந்து வருகின்றது.

சம்பூரில் 818 ஏக்கர் 2 றூட் 35.38 பேர்ச் காணிகளுக்குரிய ஆவணங்கள் இதுவரையில் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. அத்துடன்,  505 ஏக்கர் காணி அனல் மின்நிலையத்துக்காக எடுக்கப்பட்டதுடன், 40 ஏக்கர் காணி மின்சார சபைக்காக எடுக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர்,  மக்களுக்குச் சொந்தமான மேலும் ஒருதொகுதி காணி கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்டது.  

இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரையில் ஆவணங்கள் வழங்கப்படவில்லை.
காணிகள்  விடுவிக்கப்பட்டாலும் அவை தற்போது  அரசாங்க உடைமையாகவே காணப்படுகின்றன.

எனவே, மேற்படி காணிகளை சட்ட ரீதியாக மக்களுக்கு உரித்தாக்கி ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .