2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கந்தளாயில் திடல் காணிகள் 15300ஏக்கரில் நெற் செய்கை

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதினைந்தாயிரத்து முந்நூறு ஏக்கர் திடல் காணிகளில் வேளாண்மைச் செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பிரதேசத்தின் பேராறு,வட்டுக்கச்சி,மத்ரஸா நகர்,வென்ராசன்புர மற்றும் பொட்டம்காடு போன்ற பகுதிகளில் வேளாண்மைச் செய்கைகளுக்கான உழுதல்,வரம்பு கட்டுதல் போன்ற
ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திடல் காணிகளில் செய்கைபண்ணப்படுகின்ற வேளாண்மைச் செய்கை பெரும்போக காலங்களில் மழை நீரை நம்பி வேளாண்மை மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .