2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கற்றல் உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கிவைப்பு

Thipaan   / 2016 ஜூலை 26 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனமான முஸ்லிம் எயிட் அமைப்பும் மூதூர் திரிசீடி அமைப்பும் இணைந்து, மூதூரில் இயங்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மூதூரின் முத்துக்கள் பாடசாலைக்கு, கற்றல் உபகரணங்களும் தளபாடங்களையும் வழங்கி வைத்ததாக, முஸ்லிம் எயிட் அமைப்பின் பிராந்திய முகாமையாளர் மகரூப் சம்சுதீன் தெரிவித்தார்.

மூதூர் சமாதான இல்லத்தில் நேற்று (25) இடம் பெற்ற இந்நிகழ்வில், 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், முஸ்லிம் எயிட் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அப்துல் சலீம், திரிசீடி அமைப்பின் செயலாளர் எம்.புஹாரி, மூதூர் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.அப்துல் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X