2021 மார்ச் 08, திங்கட்கிழமை

குளவிக்கொட்டுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
    
திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை குளவிக் கொட்டுக்குள்ளான  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புல்மோட்டையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் அன்ஸார் (வயது 30) என்பவரே குளவிக் கொட்டுக்குள்ளானார்.

இவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மீன்பிடிப்பதற்காக குளத்துக்கு சென்ற வேளை மரத்திலிருந்த குளவிக்கூட்டில் தலைபட்டதினால் குளவிகள் கலைந்துவந்து கொட்டியதாக தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .