2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சித்திரம் வரைய அழைப்பு

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

குச்சவெளிப் பிரதேசத்தை அழகுபடுத்தும் நோக்குடன், குச்சவெளி  பிரதேசத்திலுள்ள பஸ் நிலையங்கள், பொதுக் கட்டடங்களுக்கு சித்திரங்கள் வரைய, குச்சவெளிப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாரக் அழைப்பு விடுத்துள்ளார்.

“உரிய திணைக்களங்களின் அனுமதியுடன், பிரதேசத்தின் பாரம்பரியங்கள், கலாசாரங்கள், இயற்கை வளங்கள், நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வாசகங்கள் எழுதி, சித்திரங்கள் வரைந்து, அதன் ஊடாக  பிரதேசத்தை  சிறந்ததொரு சுற்றுலா மையமாக உருவாக்குவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு  பிரதேச இளைஞர்கள், சமூக சேவையாளர்கள், மாணவர்கள் அனைவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்ட அவர், குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச எல்லையின் கீழுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து செயற்படத் தயார் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .