2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சமூகப் பணி டிப்ளோமாதாரிகள் புறக்கணிப்பு

Niroshini   / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

வட மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான வெற்றிடம் தொடர்பாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் சமூகப் பணி டிப்ளோமாதாரிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொழில் வாண்மையான சமூகப் பணியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ் ஆசிரியர் சேவைக்காக இசை, நடனம் மற்றும் சுகாதாரம் போன்ற பாடங்களுக்கு விளையாட்டு விஞ்ஞானம் இசைத் துறையில் டிப்ளோமா தகைமைகளாக கோரப்பட்டும் இரண்டு வருட சமூகப் பணி உயர் டிப்ளோமா புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சமூக சேவைகள், நலன்புரி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் மூலமாக முழு நேர பாடநெறியாக சமூகப் பணி உயர் டிப்ளோமா இரு வருடங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பாடநெறிகளுக்கு எந்தவித பதவிகளும் தகைமைகளாக ஆட்சேர்ப்பில் சேர்க்கப்படுவதில்லை எனவும் இவ்விடயம் தொடர்பாக வடமத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு கவனத்தில் கொண்டு, குறிப்பிட்ட துறை தொடர்பான பாடநெறிக்கு தகைமைகளாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--