2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சிறைக் கைதிகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள்

Thipaan   / 2016 ஜூலை 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

சிறைச்சாலைகள் தினத்தையொட்டி, திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள், நேற்று சனிக்கிழமை(16) நடைபெற்றன.

சிறைச்சாலை அதிகாரி பிரசாத் ஹேமந்த தலைமையில் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், விளக்கமறியல் மற்றும் சிறைக்கைதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது சித்திரம் வரைதல் மற்றும் பாடல், கவிதை, நாடகம் மற்றும் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டது.

அத்தோடு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரியினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில், சிறைச்சாலை பிரதான அதிகாரி, புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை பாதுகாவலர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .