2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஜெலிக்னைட் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஜூலை 23 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஜவாத்நகரில், ஜெலிக்னைட் வெடிபொருட்கள் 68ஐ வைத்திருந்த ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை கைதுசெய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில்  சட்டவிரோதமாக மீன் பிடிக்கப்பாவிக்கப்படும் நோக்கில் இவ்வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  மு.சுபையீர் 56 என்பவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X