2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

திருகோணமலை சிறைச்சாலையில் கைதியொருவர் மரணம்

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், மாரடைப்பின் காரணமாக இன்று புதன்கிழமை (30) உயிரிழந்துள்ளார் என சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 

யாழ்பாணம், செட்டியார் புரத்தினைச் சேர்ந்த 52 வயதுடைய அருளப்பு பத்திநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மனைவியை எரித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த இந்நபர், இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.

சடலம், தற்போது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை திருகோணமலை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .