George / 2016 ஜூலை 15 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் திருடப்பட்ட பெறுமதியான அலைபேசிகள் 15ஐ தம்வசம் வைத்திருந்த நபரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சென்று கடையொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
குறித்த சந்தேகநபரின் நண்பன், திருகோணமலை பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து முப்பதுக்கும் மேற்பட்ட பெறுமதியான அலைபேசிகள், சிம் அட்டைகள், மீள் நிரப்பும் அட்டைகளை திருடி சந்தேகநபரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையிலே சந்தேகநபரை செவ்வாய்கிழமை(12) மாலை கைது செய்துள்ளதாகவும் அவரது நண்பன் தலைமறைவாகியுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் கூறினர்.
31 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
21 Mar 2026