2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை சிறைச்சாலையில் நத்தார் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை சுகாதார கிறிஸ்தவ நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் பிரசாத் ஹேமந்தவின் தலைமையில் இன்று (24) காலை நடைபெற்றது.

இதன்போது, 45 சிறைக்கைதிகளின் பாடசாலை செல்லுகின்ற பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.   

இந்நிகழ்வில், சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் மற்றும் திருகோணமலை சுகாதார  கிறிஸ்தவ நலன்புரி பிரிவின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .