2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் 270 மதுபான போத்தல்களைக் கொண்டுசென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய ஜீப், ஓட்டோ, மோட்டார் சைக்கில் ஆகியனவும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த மூவரையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும்பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி, நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையிலேயே, மேற்படி மூவரும் கைதாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .