2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 மே 21 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 
   
திருகோணமலை, மூதூர் பிரிவிலுள்ள மேன்கமம் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம் பெருகி வருகின்றது. வயல் நிலங்கள், விளைநிலங்கள் என அனைத்தையும் துவசம் செய்கின்றன.

விதைத்த வயல் நிலங்களும் அறுவடைக்குத் தயாரான வயல்களும் நாளுக்கு நாள் யானைகளால் அழிக்கப்படுகின்றன.

மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகின்ற சேனைப் பயிர்களும் யானைகளால் தினம் தினம் அழிக்கப்படுகின்றன.

இதுதொடர்பில் பலரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 
 யானையின் தாக்குதலில் அண்மையில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் காட்டு யானைகள் மக்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இது தொடர்பில் விரைவில் நடவடிக்கைகளை எடுக்காதவிடத்து இன்னும் பல உயிர்கள் பலியாகும் என மக்கள் அச்சம் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .