Princiya Dixci / 2016 மார்ச் 24 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் 10 மீன் தொட்டிகளைத் திருடி ஒரு இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த கனேமுல்லப் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரை, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதவான் ஹயான் மீ ஹககே, நேற்று புதன்கிழமை (23) உத்தரவிட்டார்.
சந்தேகநபர், திருகோணமலைப் பிரதேசத்தில் கலர் மீன் விற்பனை செய்து வரும் நிலையிலே இவ்வாறு பத்து மீன் தொட்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாகக் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், செவ்வாய்கிழமை (22) இரவு கைதுசெய்து பொலிஸார், குச்சவெளி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .