Thipaan / 2016 ஜூலை 17 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, விஜிதபுர கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய கைக்குண்டொன்றை, இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டுள்ளதாக, தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச மக்கள் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குண்டை மீட்டுள்ளனர்.
குண்டு, தற்பொழுது தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விஷேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துஈதலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .