2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வீதியின் நடுவில் பாய்ந்த மயில்: பஸ் புரண்டு 40 பேர் காயம்

Princiya Dixci   / 2016 மார்ச் 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பழுலுல்லாஹ் பர்ஹான்

கதுறுவெலையிலிருந்து கல்முனை நோக்கித் தனியார் பஸ்ஸொன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை, வெலிகந்தப் பகுதியில் வைத்து மயிலொன்று வீதியின் நடுவில் திடீரெனப் பாய்ந்தமையால் சாரதியின் தடுமாற்றத்தால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தடம்புரண்டதில் 40 பயணிகள்  காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, நேற்று புதன்கிழமை (02) மாலை 04 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பயணிகள், பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--