2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் அதிரடியாக கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 31 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் அரச பேருந்தின் சாரதி ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சந்தேக நபரை கண்காணித்து வந்த வேலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சாரதியிடம் 2 போதை வில்லைகள், ஹேரோயின் 77 மில்லி கிரேம் வைத்திருந்துள்ளார்.

இவ்வாறு கைது செய்ய பட்டவர் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் சாரதியும் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

சந்தேகநபரை இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X