Thipaan / 2016 ஜூலை 28 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவுல்வௌ பகுதியில், இன்று (28) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய நபர், கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
பக்மீகம, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த தானில் சந்தறுவன் (18 வயது ) என்பவரே இவ்வாறு உயிரிழந்தாகத் தெரிவித்த பொலிஸார், அதே இடத்தைச்சேர்ந்த சுதத் லக்மால் (18 வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மதவாச்சி பகுதியிலிருந்து கல்கடவெல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் சென்று கொண்டிருந்த போது, தாவுல்வௌ வளைவில் வைத்து, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரும் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
49 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
3 hours ago
4 hours ago