2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

திருமலை மாவட்டத்தில் 10 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம், எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் 10 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இன்று பிற்பகல் 5 மணி வரையில் திருகோணமலை மாவட்டத்தில் 10 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் நாலக ரத்னாயக தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபைக்கு  04 சுயேட்சை குழுக்களும் கிண்ணியா பிரதேச சபைக்கு 01 சுயேட்சை குழுவும் மூதூர் பிரதேச சபை 01 சுயேட்சை குழுவும் பதவிசிறிபுற பிரதேச சபைக்கு 01 சுயேட்சை குழுவும் வெருகல் பிரதேச சபைக்கு 01 சுயேட்சை குழுவும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு 01 சுயேட்சை குழுவும் குச்சவெளி பிரதேச சபைக்கு 01 சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை குச்சவெளி பிரதேச சபைக்கு அகில இலங்கை தமிழர் கூட்டணியும் கிண்ணியா நகர சபைக்கு ஒரு சுயேட்சை குழு இன்று திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--