2021 ஜனவரி 16, சனிக்கிழமை

திருமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 11524 பேர் பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)
திருகோணமலை மாவட்டத்தில் மழை, வெள்ளம் காரணமாக 11524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  3078 குடும்பங்களைச்சேர்ந்த 11 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 500 குடும்பங்களைச்சேர்ந்த 1605 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதபகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெருகல் பிரதேசத்தில் இரண்டு நலன்புரி நிலையங்களும்; மூதூர், சேருவில மற்றும் தம்பலகமம் ஆகிய பிரதேசங்களில் தலா ஒன்று என்ற நிலையிலும் நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

வெருகலில் 556 குடும்பங்களைச் சேர்ந்த 1995 உறுப்பினர்களும் சேருவிலவில் 173 குடும்பங்களைச் சேர்ந்த 481 உறுப்பினர்களும் திருகோணமலை பட்டணமும் கூழலும் பகுதியில் 314 குடும்பங்களைசச் சேர்ந்த 1095 உறுப்பினர்களும்; கந்தளாய் பகுதியில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 66 உறுப்பினர்களும் கிண்ணியாவில் 1330 குடும்பங்களைச் சேர்ந்த 5169 உறுப்பினர்களும் தம்பலகமத்தில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 120 உறுப்பினர்களும்; மூதூர் பகுதியில் 517 குடும்பங்களைச் சேர்ந்த 2638 உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .