2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இயலுமை குறைந்தவர்களுக்கு திருகோணமலையில் பயிற்சி நிலையம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இயலுமை குறைந்தவர்களுக்கான பயிற்சி நிலையமொன்றை திருகோணமலையில் அமைக்கவுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு செல்வநாயகபுரம் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்.எம்.சுபைர் இதனை நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரியவதி காலாபதியும் கலந்து கொண்டார்.

3 மாடிகளைக் கொண்டதாக இப்பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. இங்கு இயலுமை குறைந்தவர்கள் தங்கியிருந்து பயிற்சி பெறத்தக்க வகையில் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .